கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் பத்துதல படத்தில் நடித்துள்ளனர். சிம்பு பாதாள உலக கும்பல் தலைவனாக நடிக்க, கவுதம் கார்த்திக் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார்.
இந்த மாத தொடக்கத்தில், டீசர் அதிக வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பத்துதல படத்தில் சிம்பு கதாபாத்திரம் சிம்புவை விட தல அஜீத்க்கு சிறப்பாக இருக்கும் என்றும் இப்படத்திற்கு முதலில் அஜித்திடம் கேட்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்